மார்ச்-5ஆம் தேதியை ஆவலுடன் எதிர்பார்க்கும் சூர்யா ரசிகர்கள்..!

surya 36 firstlook

செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி நடித்த ஆயிரத்தில் ஒருவன் படம் வெளியாகி கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் தான் சூர்யா-செல்வராகவன் கூட்டணி சேர்ந்துள்ளனர்.. சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் இந்தப்படம் சூர்யாவின் 36வது படமாகும். வரும் மார்ச்-5ஆம் தேதி இந்தப்படத்தின் பர்ஸ்ட்லுக்கை வெளியிடுகின்றனர்.. வரும் தீபாவளி வெளியீடாக இந்தப்படத்தை வெளியிட திட்டமிட்டு தயாரித்து வருகிறார்கள் எப்போதும் தரமான படங்களை தயாரிக்கும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம்.