டப்மாஷ் பெண்ணிற்கு ‘கபாலி’யின் சர்ப்ரைஸ் கிப்ட்..!

kabali dubmash lady

சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த ‘கபாலி’ படத்தின் ட்ரெய்லர், குறிப்பாக ‘கபாலிடா’ என ரஜினி பேசும் டயலாக் எந்த அளவுக்கு ரசிகர்களின் மத்தியில் வரவேற்பு பெற்றது என்பதை சொல்ல தேவையில்லை. சோஷியல் மீடியாவில் பலரும் அந்த வசனத்தை தங்களுக்கு ஏற்றமாதிரி டப்மாஷ் பண்ணி வெளியிட்டு மிரட்டினார்கள்..

அதில் ஒரு பெண் ‘பொண்டாட்டி டா’ என டப்மாஷ் பண்ணியதுதான் இருப்பதிலேயே அதிக அளவு ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. இது ‘கபாலி’ ரிலீசுக்கு முன் அமெரிக்காவில் ஓய்விலிருந்த சமயத்திலேயே ரஜினியின் கவனத்துக்கும் போக, அதை பார்த்து வெகுவாக ரசித்தாராம் ரஜினி..

கபாலி ரிலீசுக்குப்பின் சென்னை திரும்பிய ரஜினி, அந்தப்பெண் யாரென விசாரித்து தான் பார்க்கவிரும்புவதாக கூறினார். அந்த தகவல் அந்தப்பெண்ணுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு தனுஷின் வீட்டில் வைத்து அவரை சந்தித்தார் ரஜினி..

தனது டப்மாஷ் ரஜினியையே சந்திக்கும் அளவுக்கு கொண்டுவந்து விடும் என கனவிலும் நினைத்து பாராத அந்தப்பெண் மிகவும் மகிழ்ச்சியை அடைந்தார். அவரிடம் ரஜினி அந்த டப்மாஷ் குறித்தும் அதை உருவாக்கும் எண்ணம் எப்படி வந்தது என்றும் விசாரித்தாராம்.