“யார் காலில் விழவேண்டும்..? விழக்கூடாது..? ; ரசிகர்களுக்கு ரஜினி சொன்ன உபதேசம்..!

RAJINI FANS MEET 3rd day

தனது ரசிகர்களை இன்று மூன்றாவது நாளாக சந்தித்து வருகிறார் ரஜினி. இந்த சந்திப்பின்போது மதுரை, சேலம் ஆகிய பகுதிகளில் இருந்து ரஜினி ரசிகர்கள் திரளாக கலந்துகொண்டனர். இந்த சந்திப்பின்போது ரசிகர்களிடம் பேசிய ரஜினி “யார் காலில் விழவேண்டும்..? விழக்கூடாது..? என ரசிகர்களுக்கு உபதேசம் செய்தார்.

“நம்மை படைத்த கடவுள், வளர்த்து ஆளாக்கிய அம்மா, மற்றும் வாழ்க்கையில் பல அனுபவங்களை கடந்து வந்த பெரியவர்கள் என இந்த மூன்று பேர் கால்களில் விழுவதில் தப்பே இல்லை. அதேசமயம், பணம், செல்வாக்கு, அதிகாரம் கொண்டவர்கள் கால்களில் நீங்கள் விழ தேவையில்லை” என கூறினார் ரஜினி.