புதுவிதமான வசன பாணியில் மிரட்டும் சூப்பர் டீலக்ஸ் ட்ரெய்லர்

‘ஆரண்ய காண்டம்’ படத்துக்கு பிறகு இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. இதில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி திருநங்கை வேடத்தில் நடித்துள்ளார். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் ஃபஹத் பாஸில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பகவதி பெருமாள், இயக்குநர் மிஷ்கின், மிருணாளினி ரவி ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படத்தின் ட்ரெய்லர், இன்று மாலை வெளியிடப்பட்டது. வெளியான சில நிமிடங்கலிளேயே, சமூக வலைதளங்களில் சூப்பர் டீலக்ஸ் ட்ரெய்லருக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் இதுபோன்ற ஒரு ட்ரெய்லரை பார்த்ததே இல்லை, என பெருமளவு பாராட்டி வருகின்றனர். குறிப்பாக ஒரே வசனத்தை விஜய்சேதுபதி வெவேறு மாடுலேஷன்களில் பேசும் விதமாக ஒரு புதுமாதிரியாக இந்த ட்ரெய்லர் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தை வருகிற மார்ச் 29-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.