‘முத்தின கத்திரிக்கா’யில் ‘வின்னர்’ நாயகிக்கு என்ன ரோல்..?

Kiran

சில தினங்களுக்கு முன் வெளியான ‘முத்தின கத்திரிக்கா’ ட்ரெய்லரை பார்த்தபோது அதில் ஒரு சில காட்சிகளில் தட்டுப்பட்ட பெண்ணை பார்த்தபோது இவரை எங்கோ பார்த்திருக்கிறோம் என நினைப்பதற்குள்ளாகவே ‘அட நம்ம கிரண்’ என கைப்புள்ள மற்றும் கட்டதுரையின் புண்ணியத்தால் உடனடி ஞாபகத்துக்கு வந்தார்.. ஆம். சுந்தர்.சி இயக்கிய ‘அன்பே சிவம்’, ‘வின்னர்’ படங்களில் நாயகியாக நடித்தாரே கிரண்.. அவரே தான்.

இந்தப்படத்தில் கதாநாயகி பூனம் பஜ்வாவின் அம்மாவாக நடிக்கிறார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் பூனம் பஜ்வாவை காதலிக்கும் சுந்தர்.சி, அவர் வீட்டுக்கு பெண்கேட்டு போகும்போதுதான் தெரியவருமாம் கிரணும் சுந்தர்.சியும் ஒன்றாக படித்தவர்கள் என்பதும், ஒரு காலத்தில் கிரணையே அவர் லவ்ஸ் பண்ணிய விஷயமும். இதை வைத்தே படத்தின் காமெடி எந்த லெவலில் இருக்கும் என்பதை எடைபோட்டுக்கொள்ளுங்கள்..