சுந்தர்.சிக்கு கொடுக்கப்பட்ட மிகப்பெரிய பொறுப்பு..!

sundar-c 29

1௦௦வது படம் என்பது மிக முக்கியமான மைல் கல்லாக கருதப்படுவது… முன்னணி நடிகர்கள் எளிதாக 100 படங்களை தாண்டி விடுவார்கள்.. ஆனால் இயக்குனர்களில் வெகு சிலர் மட்டுமே 100 படங்களை இயக்கியுள்ளார்கள். தயாரிப்பு நிறுவனம் என்றால் 50 படங்களை தயாரிப்பது என்பதே மிகப்பெரிய சாதனை தான்..

ஆனால் மறைந்த இயக்குனர் ராம நாராயணன் 100 படங்களை இயக்கியதோடு அவருடைய தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனமும் தமிழ் மட்டுமல்லாது மற்ற மொழிகளிலும் சேர்த்து 99 படங்களை தயாரித்து, இதோ வெற்றிகரமாக 100வது படத்தை தயாரிக்கப்போகிறது.

இந்த 100வது படத்தை இயக்கும் அதிர்ஷ்டம் இயக்குனர் சுந்தர்.சிக்கு கிடைத்திருக்கிறது.. அதைவிட மிகப்பெரிய பொறுப்பு ஒன்று சுந்தர்.சி மேல் சுமத்தப்பட்டு உள்ளது என்றும் கூட சொல்லலாம். வரலாற்றுபின்னணியில் தமிழ், தெலுங்கு, இந்தி மூன்று மொழிகளுக்கும் ஏற்றவாறு மும்மொழியில் பிரபலமானவர்களை கொண்டு இந்தப்படத்தை சுந்தர்.சி உருவாக்க இருக்கிறாராம்.