“வைபவின் கதையை கேட்டதும் பரிதாபமாக இருந்தது” – சுந்தர்.சி கலாட்டா..!

Vaibhav-Reddy
இதுவரை அவ்னி கிரியேஷன்ஸ் மூலமாக படங்களை தனது மனைவி குஷ்பு பெயரில் படங்களை தயாரித்துவந்த சுந்தர்.சியை முதன்முதலாக தனது பெயரில் ஒரு படத்தை தயாரிக்க தூண்டியது நாளைய இயக்குனர் சீசனில் பங்கெடுத்த பாஸ்கரின் கதை.

செல்போனில் பேய் என்கிற வித்தியாசமான கான்செப்ட்டில் ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’ என சூப்பர் டைட்டிலை வைத்து படத்தை இயக்கியும் முடித்துவிட்டார் பாஸ்கர். வைபவ், கருணாகரன், ஓவியா, ஐஸ்வர்யா ராஜேஷ் இவர்களுடன் சிங்கம்புலி, வி.டி.வி கணேஷ், யோகிபாபு, சிங்கப்பூர் தீபன் என சுந்தர்.சியே பொறாமைப்படும் அளவுக்கு நகைச்சுவை பட்டாளமே இந்தப்படத்தில் உண்டு.

சித்தார்த் விபின் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படத்தை பற்றி பேசிய சுந்தர்.சி, வைபவுடன் பழகுவதற்கு முன்னாள் அவர் ஒரு காசனோவா டைப்பிலான ஆள் (பல பெண்களை காதலிக்கும் குணம் கொண்ட நபர்) என்றுதான் நினைத்தாராம் சுந்தர்.சி. ஆனால் அவருடன் பழகும்போது அவரது சொந்தக்கதையை கேட்டால் ரொம்ப பரிதாபமாக இருந்ததாம். சரிதான் அப்ப இவரும் நம்ம லிஸ்ட் தான் என அன்றிலிருந்து இருவருக்கும் நட்பு பலப்பட்டுவிட்டதாம்.

அதுமட்டுமல்ல, இந்தப்படத்தின் கதையை பாஸ்கர் சொன்னபோது அதில் பேய் கேரக்டர ஓவியாவுக்கு செட்டாகும் என சொன்னாராம். சுந்தர்.சியும் “அட ஆமா.. முட்டை கண்ணை உருட்டி முழிக்கும் ஓவியாவுக்கு ஏற்ற கேரக்டர் தான்” என ஒகே சொன்னாராம்.