பேயே இல்லாத ஹாரர் படத்தில் சுந்தர்.சி

iruttu 2

நேபாளி, 6 மெழுகுவர்த்திகள் படங்களை இயக்கிய வி.இசட்.துரை இயக்கத்தில் உருவாகியுள்ள ஹாரர் திரைப்படம் தான் ‘இருட்டு’. சுந்தர்.சி இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார் இந்தப்படம் இதுவரை நாம் யாரும் கண்டிராத புது வகை ஹாரர் திரைப்படமாக இருக்கும் என்கிறார்கள்.

சுந்தர்.சி கூட ஹாரர் காமெடி படமான அரண்மனையின் இரண்டு பாகங்களையும் இயக்கியுள்ளார். ஆனால் இப்படம் புதுமையான டார்க் ஹாரர் படமாக இருக்கும். குறிப்பாக பேயே இல்லாத ஹாரர் படம் இது. “எனக்கு பேயே இல்லாத ஹாரர் படம் ஒன்றை இயக்க வேண்டும் என்று ஆசை. அதை நான் இப்படத்தில் சரியாக செய்துள்ளேன் என்று நினைக்கிறேன்” என்றார் வி.இசட்.துரை.

படத்தின் 85% படப்பிடிப்பு ஒரே ஷெட்யூலில் ஊட்டியில் வைத்து நடைபெற்றது. இன்னும் படத்தின் சில காட்சிகள் ஹைராபாத் மற்றும் சூரத்தில் நடைபெறவுள்ளது. படத்தில் சுந்தர்.சியுடன் தன்ஷிகா, சாக்சி பர்வீந்தர், விடிவி கணேஷ், யோகிபாபு ஆகியோர் நடிக்கிறார்கள். கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.