ஹாரரை தொடர்ந்து க்ரைம் த்ரில்லரில் நடிக்கும் சுந்தர்.சி


தற்போது தான் இயக்கி நடித்துள்ள ஹாரர் படமான அரண்மனை-3 படத்தை முடித்து ரிலீஸுக்கு தயார்செய்து வரும் சுந்தர்.சி, நடிப்பு, டைரக்சன் என இரட்டை குதிரை சவாரியை திறம்பட செய்து வருகிறார். அந்தவகையில் கட்டப்பாவ காணோம் வெற்றி படத்தை தொடர்ந்து, இயக்குனர் மணி செயோன் இயக்கும் புதிய சுந்தர்,சி கதாநாயகனாக நடிக்கின்றார்..

க்ரைம் டிராமாவாக உருவாகும் இப்படத்தில் ஹெபா படேல், சாந்தினி தமிழரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உடன் பிக்பாஸ் புகழ் அபிராமி வெங்கடாசலம், கமல் காமராஜ், ஜெயகுமார், முருகதாஸ், ராஜ்குமார், அஜித் கோஷி ஆகியோர் நடிக்கின்றனர்.

மணி பெருமாள் ஒளிப்பதிவை மேற்கொள்ள சந்தோஷ் தயாநிதி இசையமைக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பூஜையுடன் துவங்கியுள்ளது.