‘குடும்ப’ பட இயக்குனர் ஆனார் ஸ்டண்(ட்) சிவா..!

விஜய் நடித்த ‘லவ் டுடே’ படம் மூலம் சண்டை பயிற்சியாளராக அறிமுகமானவர் ஸ்டன் சிவா. கமலின் ‘வேட்டையாடு விளையாடு’, விஜய்யின் ‘காவலன்’, சூர்யாவின்  ‘கஜினி’ உட்பட பல படங்களில் சண்டைக்காட்சிகளால் நம் இதயத்தை அதிரவைத்தவர். இவர்தான் தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார்.

இந்தப்படத்தின் கதையை சிவாவின் மனைவி லேனி ஹவ் எழுத, திரைக்கதை, எழுதி இயக்குகிறார் ஸ்டண்ட் சிவா. அதுமட்டுமல்ல இந்தப்படத்தில் சிவாவின் இரண்டு மகன்கள் கெவின், ஸ்டிவின் ஆகியோர் நடிக்க, அவரது மனைவி லேனி ஹவ்வும் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். இவர்கள் தவிர ரோஹினி, ஜூனியர் பாலையா, நந்தா பெரியசாமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். குடும்பமே இதில் பணியாற்றினாலும் ஆக்சனுக்கும் குறைவிருக்காது என்று நம்பலாம். இந்தப்படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.

கேரா ஜெரிமீயா என்பவர் இசையமைக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பை தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு தொடங்கி வைத்தார். மேலும், இயக்குனர் பிரபு சாலமன் இப்படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.