ரஜினியுடன் தனது பிறந்தநாளை கொண்டாடிய பீட்டர் ஹெய்ன்..!

peter hein birthday function

இன்றைய தேதியில் அதிரடியான, மிகவும் ரிஸ்க்கான சண்டைக்காட்சிகளை வடிவமைப்பதில் ஜித்தர் தான் ஸ்டாண்ட் இயக்குனர் பீட்டர் ஹெய்ன்..ஷங்கரின் ஆஸ்தான ஸ்டண்ட் இயக்குனராக பீட்டர் ஹெய்ன் அதன்மூலம் ரஜினி நடித்த சிவாஜி, எந்திரன் ஆகிய படங்களுக்கு பிரமிக்க வைக்கும் வகையில் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துக்கொடுத்து ரஜினி ரசிகர்களை உற்சாகப்படுத்தியவர்.

தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மீண்டும் ரஜினியுடன் இணைந்து பணியாற்றி வருகிறார் பீட்டர் ஹெய்ன். நேற்று அவரது பிறந்தநாள்.. அதுவும் அவருக்கு மறக்க முடியாத விசேஷமான நாளாக அமைந்துவிட்டது.. ஆம்.. ரஜினி, கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் உடனிருக்க, அவர்களது வாழ்த்துக்களுடன் பிறந்தநாளை கொண்டாடியுளார் பீட்டர் ஹெய்ன்