‘டார்லிங்’கை தொடர்ந்து ‘கண்மணி’யையும் கைப்பற்றியது ஸ்டுடியோ கிரீன்..!

படங்களை தயாரிப்பதாகட்டும், வாங்கி வெளியிடுவதாகட்டும் ஸ்டுடியோகிரீன் என்கிற லேபிள் இருந்தால் அதன் பிசினசே வேறு. ‘அட்டகத்தி’யில் ஆரம்பித்து, நல்ல படங்களையும் வாங்கி வெளியிட்டு வரும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம். அந்த வகையில் கடந்த பொங்கலன்று ‘டார்லிங்’ படத்தை வெளியிட்டு ரசிகர்களை திருப்திப்படுத்தியது. அவர்கள் கணித்த மாதிரியே படமும் வெற்றிப்படமாக அமைந்தது.

‘டார்லிங்’ படத்தை தொடர்ந்து தற்போது மணிரத்னம் இயக்கத்தில், துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்து, மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ஓ காதல் கண்மணி’ படத்தையும் ஸ்டுடியோ கிரீன் தான் வெளியிடுகிறது. வரும் தமிழ் புத்தாண்டு தினமான ஏப்-14ல் இந்தப்படம் ரிலீஸாகிறது. அதற்கு முன் தங்களது சொந்த தயாரிப்பான கார்த்தி நடித்துள்ள ‘கொம்பன்’ படத்தை மார்ச்-27ல் ரிலீஸ் செய்கிறது.