“மது அரக்கனை விரட்டுங்கள்” – இளைஞர்களுக்கு வைரமுத்து வேண்டுகோள்..!

 

மக்களிடையே பெரும் வரவேற்பையும் நன்மதிப்பையும் பெற்றுள்ள வீ  கேர் நிறுவனத்தின் பதினைந்தாவது ஆண்டு விழா கோவை கொடிசியா அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது. நடிகைகள் பியா, பூர்ணா, மீனாக்ஷி தீக்ஷித், பூனம் பாஜ்வா ஆகியோர் நடனமாடியதை பார்த்தபோது இங்கு நட்சத்திர கலைவிழா தான் நடக்கிறதோ என்று சொல்லும்படியாக விழா நடந்தது.,

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கவிப்பேரரசு வைரமுத்து வாடிக்கையாளர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கி வாழ்த்திப் பேசியதோடு பேச்சோடு பேச்சாக உடல் நலம் மற்றும் தலைமுடி சம்பந்தப்பட்ட சில பயனுள்ள குறிப்புகளையும் வழங்கினார். அத்துடன் நோய்க்கு மூல ஆதாரமாக விளங்கும் மது அரக்கனை ஒழியுங்கள் என்றும் அங்கு வந்த திரளான இளைஞர்களிடம் வேண்டுகோளும் விடுத்தார்..