நட்சத்திர கிரிக்கெட் கோப்பையை அறிமுகப்படுத்திய விக்ரம்..!

star cricket
நடிகர் சங்கத்துக்கு சொந்தமான இடத்தில் கட்டடம் கட்டுவதற்காக புதிய நடிகர் சங்க நிர்வாகிகள் பல்வேறு திட்டங்களை தீட்டியுள்ளனர். அதில் ஒன்றுதான் நட்சத்திர கிரிக்கெட் நடத்துவது.. இந்த கிரிக்கெட்டில் பங்கேற்க இப்போது சூர்யா, கார்த்தி, விஷால், சிவகார்த்திகேயன், ஆர்யா, ஜீவா, விஜய்சேதுபதி, ஜெயம் ரவி தலைமையில் எட்டு டீம்கள் பிரிக்கப்பட்டுள்ளன.

இந்த நடசத்திர கிரிக்கெட்டுக்கான வெற்றிக்கோப்பையை அறிமுகப்படுத்தும் விழா நேற்று முன்தினம் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது.. இத நிகழ்வில் திரளாக கலந்துகொண்ட நடிகர் சங்க உறுப்பினர்கள் மத்தியில் இந்த கோப்பையை நடிகர் விக்ரம் அறிமுகப்படுத்தினார்.