அரை சதம் அடித்த சர்கார்

sarkar 50

கடந்த தீபாவளி என்று ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்சனில் விஜய் நடித்த சர்கார் படம் வெளியானது. வெளியாவதற்கு முன்பு கதை சர்ச்சையில் சிக்கிய இந்த படம், வெளியான பின்பு அரசாங்க திட்டங்களை விமர்சித்ததாக வேறொரு சர்ச்சையில் சிக்கியது ஆனாலும் இவை எல்லாமே இந்த படத்திற்கு பிளஸ் பாயிண்ட் ஆகவும் இலவச விளம்பரமாகவும் அமைந்து படத்தை வெற்றிப் படமாக்கியது

படம் வெளியாவதற்கு முன்பே இந்த படத்தின் வியாபாரம் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது படத்தின் வசூலும் இதற்கு முந்தைய விஜய் படங்களை விட சற்று அதிகம்தான் என வினியோகஸ்தர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது இந்தப்படம் வெளியான பின்பு ரஜினி நடித்த 2.O மற்றும் சமீபத்திய கிறிஸ்துமஸ் ரிலீசாக வெளியான ஆறு படங்கள் உட்பட சுமார் பத்து படங்கள் வெளியான நிலையிலும் சர்கார் படம் தற்போது வெற்றிகரமாக 50வது நாளை தொட்டுள்ளது ஆச்சர்யமான விஷயம்.,