‘செம போத ஆகாதே’ படத்தை வெளியிடும் தேனாண்டாள் பிலிம்ஸ்..!

sema bothai aagathe

பாணா காத்தாடி படம் மூலம், அதர்வாவை திரையுலகிற்கு அறிமுகம் செய்த இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் மீண்டும் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் ‘செம போத ஆகாதே’. அதர்வா தயாரித்துள்ள இந்தப்படம் தற்போது நவம்பர் மாதம் ரிலீஸுக்கு தயாராகியுள்ளது.

இந்தப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தமிழகமெங்கும் வெளியிடும் உரிமையை கைப்பற்றியுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப்படத்தில் அதர்வாவுடன் மிஷ்டி சக்கரபர்த்தி, அனைகா சோட்டி, ஜான் விஜய், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்