‘பைரவா’ தமிழ்நாடு ரைட்ஸை கைப்பற்றிய ஸ்ரீகிரீன் புரடக்சன்ஸ்..!

bairavaa-1

பரதன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் ‘பைரவா’ படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. கீர்த்தி சுரேஷ், அபர்ணா வினோத், சதீஷ் மற்றும் பலர் நடித்துவரும் இந்தப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைகிறார். இன்னும் ஒரேயொரு பாடல் காட்சி மட்டுமே படமாக்கப்பட வேண்டியிருக்கிறதாம்.

இந்தநிலையில் ‘பைரவா’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ஸ்ரீகிரீன் புரடக்சன்ஸ் நிறுவனம் மிகப்பெரிய தொகை கொடுத்து கைப்பற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது. இது இதற்குமுன் வெளியான விஜய்யின் ‘தெறி’ படத்துக்கு கொடுக்கப்பட்ட தொகையை விட அதிகம் என்றும் சொல்லப்படுகிறது..

இந்த ஸ்ரீகிரீன் புரடக்சனிடமிருந்து வட ஆற்காடுக்கான விநியோக உரிமை 3.7 கோடி ரூபாய்க்கும் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி விநியோக உரிமை 3.5 கோடி ரூபாய்க்கும் விற்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.