வீரத்தை விலை பேசினார் ராம.நாராயணன்

‘ஆரம்பம்’ படம்போல ரிலீஸ் தேதிகளை அவ்வப்போது மாற்றாமல் பொங்கல் ரிலீஸ், அதுவும் ஜனவரி பத்தாம் தேதி என ஐந்து நாட்கள் முன்கூட்டியே களத்தில் முதல் ஆளாக குதிக்க இருக்கிறது அஜீத்தின் ‘வீரம்’.. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்க, இன்னொரு பக்கம் வியாபாரம் சுறுசுறுப்பாக தொடங்கிவிட்டது.

ராமநாராயணனின் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் ‘வீரம்’ படத்தின் சென்னை மற்றும் என்.எஸ்.சி ஏரியா உரிமையை மிகப்பெரிய தொகைக்கு விலைபேசி வாங்கி இருக்கிறது. தயாரிப்பாளர் தரப்பிலிருந்து டிசம்பர் இறுதிக்குள் முதல் காப்பியை தந்துவிடுமாறு படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவாவிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். அப்படி வந்தால்தான் ஜனவரி முதல் வாரத்தில் படத்தை சென்சாருக்கு அனுப்பமுடியும் என்றும் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

Leave a Reply

Your email address will not be published.

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>