‘ஸ்பைடர்’ படத்தில் இந்தி பாடகரை அறிமுகப்படுத்தும் ஹாரிஸ் ஜெயராஜ்..!

prijesh saandilya

ஏ.ஆர்.முருகதாஸ், மகேஷ்பாபு என மாபெரும் கூட்டணியில் உருவாகிவரும் ‘ஸ்பைடர்’ படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி வந்தாலும் கூட, படத்திற்கு இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது, இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

ஹிந்தி பட லகில் சக்கைபோடு போட்ட ‘தனு வெட்ஸ் மனு:ரிட்டர்ன்ஸ்’ படத்தில் மாபெரும் ஹிட்டான ‘பண்ணோ’ பாடலை பாடி புகழின் உச்சிக்கு சென்ற பாடகர் பிரிஜேஷ் சாண்டில்யா, ‘ஸ்பைடர்’ படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஒரு பாடல் பாடியுள்ளார் என்பது லேட்டஸ்ட் தகவல்.

“ஏ.ஆர் முருகதாஸ், மகேஷ் பாபு மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற ஜாம்பவான்களோடு பணிபுரிவது எனது கனவாகும். இசைக்கு மொழிகளோ எல்லைகளோ இல்லவே இல்லை என்பதை நம்பும் எனக்கு, இப்பாடல் மூலம் தென்னிந்தியா சினிமாவில் நுழைவதில் மட்டற்ற மகிழ்ச்சி. இசை பற்றியும் அதன் நுணுக்கங்கள் பற்றியும் ஹாரிஸ் சாரிடம் நிறைய கற்றுக்கொண்டேன். அவருடன் பணிபுரிந்ததில் எனக்கு பெருமை. இப்பாடல் ரசிகர்களை நிச்சயம் கவர்ந்து மயக்கும் என நம்புகிறேன்” என்கிறார் பிரிஜேஷ் சாண்டில்யா.