ஹாரிஸ் இசையில் 7 வருடங்களுக்குப்பின் பாடும் எஸ்.பி.பி

முன்பு ஒரு காலத்தில் ரஜினி, கமல் இருவரின் குரலாகவே ஒவ்வொரு படத்திலும் ஒலித்துக் கொண்டு இருந்தவர் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமண்யம். ஆனால் இசைத்துறையில் இளைய தலைமுறை நுழைந்த பின்பு, அவரை பெரிய அளவில் பயன்படுத்த தவறி விட்டார்கள் என்றே சொல்லவேண்டும்.

அந்த வகையில் தற்போது கார்த்தி நடித்து வரும் தேவ் படத்திற்காக ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் ஒரு பாடலை பாடியுள்ளார் எஸ்.பி.பி. முதன்முறையாக ஹாரிஸ் இசையில் 7 வருடங்களுக்கு முன்பு, ‘ஏழாம் அறிவு’ படத்தில் சூர்யாவுக்காக ‘யம்மா யம்மா காதல் பொன்னம்மா’ என்கிற பாடலை பாடியிருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.