சூரரை போற்று – சூர்யா பட டைட்டில் அறிவிப்பு

என்.ஜி.கே மற்றும் காப்பான் ஆகிய படங்களை முடித்துவிட்ட சூர்யா அடுத்ததாக இறுதிச்சுற்று புகழ் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கவுள்ளார். சூர்யாவின் 38 ஆவது படமாக உருவாகும் இந்தப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மற்றும் சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்ற சீக்யா என்டர்டெய்ன்மென்ட் குனீத் மோங்கோ இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்த படத்தில் கதாநாயகியாக மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ படத்தில் பஹத் பாசில் ஜோடியாக அறிமுகமான இவர் தமிழில் 8 தோட்டாக்கள், சர்வம் தாள மயம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்தப்படத்திற்கு சூரரை போற்று என டைட்டில் வைகபட்டுள்ளது. வழக்கமாக ஒரு படத்தின் முக்கால்வாசி பணிகள் முடிந்த பின்னர் தான் படத்தின் தலைப்பு வைக்கப்படும். அதற்குள் ரசிகர்கள் பலரும் தாங்களே யூகமாக ஏதாவது ஒரு டைட்டிலை பரப்பி வருவார்கள். ஆனால் அதற்கெல்லாம் இடம் கொடுக்காமல் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டுள்ள சில நாட்களிலேயே இந்தப்படத்தின் டைட்டிலை அறிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தகது.