“நாய்க்கு பாட்டு இருக்கு.. ஆனா ஹீரோயினுக்கு இல்லை” – இதென்ன கலாட்டா..?

இப்படி ஒரு நிகழ்வு தமிழ்சினிமா கண்டிருக்குமா என தெரியவில்லை.. ஆனால் அந்த புதுமையை செய்திருக்கிறது சிபிராஜ் நடித்திருக்கும் ‘நாய்கள் ஜாக்கிரதை’ படம்.. ஆம்.. படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கும் நாய்க்கு ரெண்டு பாட்டு இருக்கு.. ஆனால் ஹீரோயினுக்கு ஒண்ணுகூட இல்லை” – இதுதான் படத்தின் ஹைலைட்

வரும் 21ஆம் தேதி வெளியாக இருக்கும் ‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் சத்யராஜ், இயக்குனர் சக்தி உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். கூடவே படத்தில் நடித்த நாயான இத்தோவும் ஹாயாக வந்து ஒரு சேரில் அமர்ந்துகொண்டது..

அப்போது பேசிய இந்தப்படத்தின் கதாநாயகி அருந்ததி, “இந்தப்படத்தின் கதை கதாநாயகியான என்னைச்சுற்றித்தான் பின்னப்பட்டுள்ளது. அது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் படத்தில் இந்த நாய்க்கு ரெண்டு பாட்டு இருக்கு.. எனக்குத்தான் பாட்டே இல்லை” என கொஞ்சூண்டு வருத்தப்பட்டார்.

ஆனால் அவரது வருத்தத்தை போக்கும் விதமாக பேசிய சத்யராஜ், “கதாநாயகியின் பிரச்சனையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட நூறாவது நாள், வால்டர் வெற்றிவேல் ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கின்றன. அதனால் அருந்ததி கவலைப்பட தேவையில்லை. படம் வெற்றிபெற்று அவருக்கு இன்னும் பல வாய்ப்புகள் தேடிவரும்” என ஆறுதல் கூறினார்.