மலேசியாவில் 2௦௦ பேருடன் ஆட்டம் போட்ட சினேகன்..!

snehan dance

உலகத்தில் பெரும்பாலான உயிரினங்கள் தன் இனத்தை தானே வேட்டையாடி அழிப்பதில்லை ஆனால் மனித இனத்தில் ஆணுக்குப் பெண் சளைத்தவள் இல்லை என்பது போல் இரு பாலினமும் தன் சுயநலத்திற்காக ஒருவரை ஒருவர் வேட்டையாடுகின்றனர். நாகரீகம் என்ற பெயரில் நகரத்தின் ஒட்டு மொத்த சுயநல மனிதக் கூட்டங்கள் செய்யும் அட்டூழியங்களுக்கு எதிராக மலைகிராமத்தில் வெள்ளந்தியாக வாழ்ந்த இளைஞன் மருத்துவக் கல்லூரி மாணவனுடன் இணைந்து யுத்தம் நடத்துகிறான்

இப்படி ஒரு கதையம்சத்துடன் உருவாகியுள்ள படம் தான் ‘எவனும் புத்தனில்லை’. இயக்குனர் எஸ்.விஜயசேகரன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் நபிநந்தி கதாநாயகனாக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக ஷரத் என்ற புதுமுகம் நடிக்கிறார். நாயகிகளாக நிகாரிகா, சுவாசிகா இருவரும் நடிக்கிறார்கள். ஒரே ஒரு பாடல் காட்சியில் பூனம் கவுர் நடிக்கிறார். மற்றும் சங்கிலிமுருகன், வேலராமமூர்த்தி, நான் கடவுள் ராஜேந்திரன் பலர் நடிக்கும் இந்தப்படத்தில் சினேகன் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார்.

இதற்காக சினேகன் எழுதி அவரே நடித்த பாடல் காட்சி ஒன்று மலேசியா, சென்னை போன்ற இடங்களில் மிகப் பிரமாண்டமாகப் படமாக்கப்பட்டது. “எதுவும் தப்பில்லை எவனும் புத்தனில்லை” என்ற பாடல் காட்சி இன்றைய இளைய தலைமுறை ரசிகர்களை குறி வைத்து எடுக்கப் பட்ட பாடல் காட்சி இது. இந்த பாடல் காட்சியில் 200 நடனக் கலைஞர்கள் பங்கேற்றனர். மலேசியாவிலும், சென்னையிலும் மிகப் பிரமாண்டமான அரங்குகள் அமைத்து படமாக்கப்பட்டது.