பிரசன்னா-சினேகா 4-ஆம் ஆண்டு திருமண நாள் வாழ்த்துக்கள்..!

என்ன ஆச்சர்யமான ஒற்றுமை பார்த்தீர்களா..? சுசி கணேசன் இயக்கிய ஃபைவ்ஸ்டார் படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் அறிமுகமான பிரசன்னாவும், அதே சுசி கணேசன் இயக்கத்தில் ‘விரும்புகிறேன்’ படம் மூலம் அறிமுகமான சினேகாவும் வாழ்க்கையில் இணைந்தது அதிசயமான விஷயம் தானே. ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்தில் நடித்தபோது சினேகாவுடன் காதல் மலர, கடந்த 2௦12 மே-12ல் அவரையே மனைவியாக கரம்பிடித்தார் பிரசன்னா.

காதல் திருமணம் செய்துகொண்ட நட்சத்திர தம்பதியான பிரசன்னாவும் சினேகாவும் திருமணத்திற்கு பின்னும் சினிமாவில் நடித்து வருகின்றனர். அதேநேரம் ‘கேம் சேஞ்சர் எண்டெர்டெயின்மெண்ட்’ என்கிற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளனர். இன்று கல்யாண நாள் கொண்டாடும் பிரசன்னா – சினேகா தம்பதியினருக்கு நமது behind frames தனது இனிய நான்காம் ஆண்டு திருமண நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.