“இந்த நவீனயுகத்தில் சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கலாம்” – சிவகுமார்

sivakumar (1)

சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்க மாட்டோம் என கூறி கேரளாவில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பாலும் பெண்களே முன்னின்று போராடுகிறார்கள். அதேசமயம் இந்த நவீனயுகத்தில் சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கலாம் என காரண காரியங்களுடன் வேண்டுகோள் விடுத்துள்ளார் நடிகர் சிவகுமார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது,

“நூறு வருடங்களுக்கு முன்பு வரை சபரிமலை தற்போது உள்ளதை விட மேலும் அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது. சந்நிதானத்துக்கு செல்ல சரியான பாதை வசதி இல்லை. விலங்குகள் தாக்கும் அபாயம் அதிகமாயிருந்தது. எனவே ஆண்கள் மட்டும் கூட்டம் கூட்டமாக கோஷம் போட்டுக் கொண்டே சென்று வழிபட்டனர். பெண்களுடைய உதிர போக்கு மோப்ப சக்தி கொண்ட விலங்குகளை ஈர்க்கும் சக்தி கொண்டதால் அவர்களை . ஆண்கள் உடன் அழைத்து செல்வதில்லை.

தற்போது காலம் நவீனமயமாகி விட்டது. பழைய காலத்து அச்சங்கள் இப்போது இல்லை. நீதிமன்றமும் அனுமதி வழங்கி விட்டது. இனியும் பெண்களை சந்நிதானத்துக்குள் வரவே கூடாது என்று தடுப்பது தவறு. விரத காலங்களை தவிர்த்து வேறு நாட்களில் பெண்களும் வந்து வழிபாடு செய்யுமாறு ஒரு ஏற்பாடும் உடன்பாடும் உருவாகவேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார் சிவகுமார்.