மில்லியன் கணக்கீட்டில் இணைந்தார் சிவகார்த்திகேயன்..!


இப்போது இது ஒரு சம்பிரதாயம் அல்லது ஒரு கணக்கீடு மாதிரியே ஆகிவிட்டது. யூ டியூப் பற்றித்தான் சொல்கிறோம்.. ஒரு பாடலோ, டீஸரோ, ட்ரெய்லரோ பத்து லட்சத்திற்கும்(ஒரு மில்லியன்) குறையாத நபர்களால் யூ டியூப்பில் பார்க்கப்படுவது என்பது ஒரு சாதனையாகவே மாறிவிட்டது.

விஜய், அஜீத் என முன்னணி நடிகர்களுக்கு மட்டுமே சொந்தமாக இருந்த இந்த சாதனையை தற்போது சிவகார்த்திகேயனும் எட்டிப்பிடித்துள்ளார். சமீபத்தில் வெளியான சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மான் கராத்தே’ படத்தின் ட்ரெய்லரை இதுவரை பத்து லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பார்த்துள்ளனர்.

இந்த பார்வையாளர் கணக்கு படம் வெளியாகும்போது தியேட்டரில் கைகொடுத்தால் ‘மான் கராத்தே’ வசூலையும் அள்ளும் என் எதிர்பார்க்கலாம்.