பூஜையுடன் துவங்கிய சிவகார்த்திகேயனின் சயன்ஸ் பிக்சன் படம்

sk 14
தொடர்ச்சியான அர்ப்பணிப்பு, பேரார்வம் மற்றும் கடின உழைப்பு இதற்கெல்லாம் ஒரு பட்டியல் தயார் செய்தால் என்றால், அந்தப்பட்டியலில் சிவகார்த்திகேயனுக்கு ஒரு இடம் உண்டு. அப்படிப்பட்ட சிவகார்த்திகேயனை இன்னும் ஒரு படி ஒரு நடிகராக நிலைநிறுத்தும். அறிவியல் புனைவு படம் ஒன்று பூஜையுடன் துவங்கியது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் ரெமோ மற்றும் வேலைக்காரன் என அடுத்தடுத்து இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்த ஆர்.டி.ராஜா 24AM ஸ்டுடியோ சார்பில் இந்த படத்தை தயாரிக்கிறார். ரவிக்குமார் இந்தப்படத்தை இயக்குகிறார். நாயகியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கும் இந்த ஃபேண்டஸி பொழுதுபோக்கு படத்தில் கருணாகரன், யோகி பாபு, விஜய் டிவி புகழ் கோதண்டம் என நகைச்சுவை பட்டாளத்திற்கும் பஞ்சமில்லை அதுமட்டுமல்ல நடிகை பானுப்பிரியா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தை குறித்து ஆர்.டி.ராஜா கூறும்போது, “ஒரு தயாரிப்பாளராக, ரவிக்குமாரின் மயக்கும் கதை சொல்லலை நான் உற்சாகமாக கேட்டேன். புதுமையான விஷயங்களை அசாதாரணமாக விவரிப்பதை கண்டு வியந்தேன். உலகளவில் புகழ் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் சார் இந்த படத்திற்கு இசையமைக்க ஒப்புக் கொண்டது எங்களை மகிழ்ச்சியின் உச்சத்துக்கே கொண்டு சென்றது. மேலும், நிரவ்ஷாவின் ஒளிப்பதிவை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. ஒவ்வொரு படத்திலும் ஒளிப்பதிவில் அவரது மாய வித்தைகளை செய்ய தவறியதில்லை. ஒரு நிறுவனமாக எங்கள் வளர்ச்சிக்கு எப்போதும் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் இயக்குனர் முத்துராஜ், படத்தில் பணிபுரியும் மற்ற புகழ்பெற்ற தொழில்நுட்ப வல்லுனர்களுடன் போட்டியிடும் சவாலுக்கு தயாராகி விட்டார்” என்கிறார் உற்சாகமாக..