பட்டாளம் இயக்குனர் படத்தில் சிவகார்த்திகேயன்..!


‘மான் கராத்தே’, ‘டாணா’, ‘ரஜினிமுருகன்’ என தனக்கு இடைவெளி கொடுக்காத அளவுக்கு கைவசம் படங்களை வைத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். இதில் ஹன்சிகாவுடன் ஜோடியாக நடித்துள்ள ‘மான் கராத்தே’ படம் ஏப்ரல் 4ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப்படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் மதன் தயாரித்துள்ளார்.

அடுத்ததாக இதே நிறுவனம் தயாரிக்கும் மற்றொரு புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் சிவகார்த்திகேயன். படத்தின் கதை, மற்றும் திரைக்கதையை ஆர்.டி.ராஜா எழுதுகிறார். இவர் ‘மான் கராத்தே’ படத்தில் “ராயபுரம் பீட்டரு” மற்றும் “விழிகளில்” ஆகிய பாடல்களை எழுதியவர் தான். ‘பட்டாளம்’ படத்தை இயக்கிய ரோஹன் கிருஷ்ணா தான் இந்தப்படத்தை இயக்குகிறார்.