வேலைக்காரன் டப்பிங் துவங்கியது ; செப்-29ல் ரிலீஸ்..!

velaikkaran dubbing

ஒருகாலத்தில் ரீமேக் கிங் என அழைக்கப்படும் அளவுக்கு தொடர்ந்து ரீமேக் படங்களாக இயக்கி வெற்றிவாகை சூடியவர் இயக்குனர் மோகன்ராஜா.. ஆனால் அந்த பட்டம் தனக்கு வேண்டாம் என தூக்கி எரிந்து ‘தனி ஒருவன்’ மூலம் தமிழுக்கென ப்ரெஷ்ஷாக கதை தயார்செய்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து அசத்தினார்.. அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து வேலைக்காரன்’ என்கிற படத்தை இயக்கி முடித்தும் விட்டார் மோகன்ராஜா.

நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்தில் மலையாள நடிகர் பஹத் பாசில் மற்றும் சினேகா ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது டப்பிங் பணிகள் துவங்கியுள்ளன. செப்டம்பர்-29 ஆம் தேதி நவராத்திரியை முன்னிட்டு இந்தப்படம் ரிலீஸாக இருக்கிறது.