சிவகார்த்திகேயனும் ஒரு வகையில் மாயமோகினி தான்..!

remo-mayamohini

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ரெமோ’ படஹ்தின் ட்ரெய்லர் வெளியாகி பட்டையை கிளப்பிக்கொண்டு இருக்கிறது. இந்த நேரத்தில் ரெமோ’ படத்தின் போஸ்டர் ஒன்றும் வெளியானது.. அந்த போஸ்டரில் சிவகார்த்திகேயன் பெண் வேடத்தில் கவர்ச்சி உடை அணிந்தபடி ஹாலிவுட் நடிகை ஸ்டைலில் போஸ் கொடுத்தபடி நிற்கிறார்..

கவனித்து பார்த்தால் சில வருடங்களுக்கு முன் மலையாளத்தில் நடித்த ‘மாயமோகினி’ படத்திலும் இதேபோன்ற காஸ்ட்யூமில் இதே ஸ்டைலில் திலீப் நிற்பது போன்ற போஸ்டர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.. அந்தப்படத்தில் சூழல் காரணமாக கிட்டத்தட்ட அப்படம் முழுவதும் பெண் வேடத்தில் நடித்திருந்தார் திலீப். அந்தவகையில் பார்த்தால் ‘ரெமோ’ சிவகார்த்திகேயனும் ஒரு மாயமோகினி தான்.