சில இயக்குனர்கள் அப்படித்தான்.. தங்களது படைப்புகளை வெகு தீவிரமாக நேசிப்பார்கள். இந்த ஹீரோ தான் இந்தக்கதைக்கு பொருத்தமானவர் என முடிவுசெய்து விட்டால், இம்மியளவும் அவரைவிட்டு வேறு ஒருவரிடம் நகரமாட்டார்கள்.. கடந்த 2015ல் ‘டைம் ட்ராவலை மையப்படுத்தி ‘இன்று நேற்று நாளை’ என்கிற சயின்ஸ் பிக்சன் படத்தை இயக்கி, ரசிகர்களின் கவனம் ஈர்த்த இயக்குனர் ரவிக்குமாரும் இந்த வகையை சேர்ந்தவர் தான்..
இவர் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். கடந்த வருடமே சிவகார்த்திகேயனிடம் கதையை சொல்லி ஒப்புதலும் வாங்கிவிட்டார்.. கதை சிவகார்த்திகேயனுக்கு ரொம்பவே பிடித்துப்போனாலும், “பாஸ்.. இன்னும் இரண்டு படங்களில் நான் நடித்து முடித்த பின்னர்தான் இதில் நடிக்க தேதிகள் ஒதுக்க முடியும்.. நீங்கள் வேண்டுமென்றால் அதற்குள் வேறு ஒரு படம் கூட இயக்கிவிட்டு வந்துவிடுங்களேன்” என கூறினாராம்..
ஆனால் ரவிக்குமாரோ, எவ்வளவு நாட்கள் ஆனாலும் தான் காத்திருப்பதாகவும், இந்தப்படத்தின் கதையை செதுக்குவதற்கு இன்னும் கொஞ்சம் காலம் பிடிக்கும் என்பதால் நீங்கள் தாராளமாக உங்களது வேலைகளை முடித்துவிட்டு வாருங்கள் என்றும் பதில் கூறி சிவகார்த்திகேயனை அதிரவைத்தாராம்.
வரும் நவ-11ஆம் தேதி மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கவுள்ளது.. இந்தப்படத்தை முடித்துவிட்டு ரவிக்குமார் படத்திற்குள் நுழைய இருக்கிறார் சிவகார்த்திகேயன்.