சிவகார்த்திகேயன் நடிப்பது சயின்ஸ் பிக்சன் படமா..?

sivakarthikeyan

டைம் மெஷினை வைத்து எந்தவித குழப்பமும் இல்லாமல் ‘இன்று நேற்று நாளை’ படம் மூலம் ரசிகர்களை அசத்தியவர் இயக்குனர் ரவிகுமார்.. இவரது இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார் என்கிற தகவலை ஏற்கனவே சொல்லியிருக்கிறோம். தற்போது இந்தப்படத்தை பற்றிய புதிய தகவல் ஒன்று கசிந்துள்ளது..

அதாவது இந்தப்படமும் சயின்ஸ் பிக்சன் படமாகத்தான் உருவாக இருக்கிறதாம். எந்தவித பரிசோதனை முயற்சிகளுக்கும் தயாராக இருக்கும் சிவகார்த்திகேயன், இந்தப்படத்தின் ஸ்கிரிப்ட்டை கேட்டதுமே, இது தன்னை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லும் படம் என்பதை புரிந்துகொண்டு இந்தப்படத்தில் நடிக்க உடனே சம்மதம் தெரிவித்தாராம்.