ஹாட்ரிக் ஹிட்டுக்காக மீண்டும் இணைந்த ‘வ.வா.சங்கம்’..!

haatrik combo 1

ஒரு அறிமுக இயக்குனராக சிவகார்த்திகேயனை வைத்து ஹிட் கொடுத்துவிட்டு அடுத்தடுத்த ஹீரோக்களை தேடி செல்லாமல் தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் மட்டுமே பயணப்பட்டு வரும் இயக்குனர் போன்றாம் நிச்சயம் வித்தியாசமானவர் தான்.. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் என சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் பொன்ராமின் கூட்டணி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் திரைப்பட விநியோகஸ்தர்கள் மத்தியிலும் மாபெரும் வரவேற்பை பெற்ற கூட்டணி ஆகும் .

தற்போது இவர்கள் ஹாட்ரிக் ஹிட்டுக்காக மீண்டும் இணைந்துள்ளனர்.. இவர்களுடன் இவர்களது பங்காளிகளான சூரி, இசையமைப்பாளர் டி.இமான் ஆகியோரும் களத்தில் இணைகின்றனர். நேற்று துவங்கிய இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து முப்பது நாட்கள் தென்காசி மற்றும் அதன் சுற்று பகுதிகளில் நடைபெறவுள்ளது .

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கவுள்ளார். சிம்ரன் மற்றும் நெப்போலியன் அவர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். ஒரு கலகலப்பான பொழுதுபோக்கு படத்தை மக்கள் நிச்சயம் எதிர்பாக்கலாம் என்கிறார் இயக்குனர் பொன்ராம்.. ஆர்.டி.ராஜா இந்தப்படத்தை தயாரிக்கிறார்.