பொதுவாக, நடிகர்கள் மார்க்கெட்டில் இருக்கும் போதே ஏதாவது ஒரு சைடு பிசினஸை தொடங்குவது வழக்கம் தான். பிநாளில் தாங்களை அந்த தொழில் தாங்கிப்பிடிக்கும் என்கிற எண்ணம் கூட காரணமாக இருக்கலாம். அந்தவகையில் நகைச்சுவை நடிகர் சூரி அவரது சொந்த ஊரான மதுரையில் புதிதாக ரெஸ்டாரன்ட் ஒன்றை திறந்துள்ளார்.
ஆனால் இதை சூரி அவருக்காக கட்டவில்லை. அவருடைய குடும்பத்தினருக்காக காட்டியுள்ளாராம். மதுரையில் அவருடைய குடும்பத்தினர் அனைவரும் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறார்கள். அவர்களது எதிர்கால வாழ்க்கைக்காக இதை செய்துள்ளாராம் சூரி. இந்தநிலையில் இன்று மதுரையில் உள்ள இந்த ஹோட்டலை நடிகர் சிவகார்த்திகேயன் திறந்து வைத்துள்ளார்.