காரைக்குடி கிளம்புகிறார் சிவகார்த்திகேயன்..!

‘டாணா’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டார் சிவகார்த்திகேயன்.. இதற்காகத்தான் எப்படா என காத்துக்கொண்டிருக்கிறார் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ இயக்குனர் பொன்ராம். காரணம் இவர்கள் இருவரின் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படமான ‘ரஜினி முருகன்’ படப்பிடிப்புக்கு கிளம்பத்தான்.

வரும் அக்டோபர் 3௦ஆம் தேதி முதல் காரைக்குடியில் ‘ரஜினி முருகன்’ படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. இந்தப்படத்தை தயாரிக்கும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமே இந்த தகவலை ட்விட்டர் மூலம் உறுதி செய்திருக்கிறது.

இருவர் கூட்டணி என முதலில் சொன்னதில் ஒரு திருத்தம். வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் மூலம் சூப்பர்ஹிட்டான பாடல்களை கொடுத்த் இமான் தான் இந்தப்படத்திற்கும் இசையமைக்கிறார். சிவாகார்த்திகேயனுக்கு ஜோடியாக மலையாள நடிகையான கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.