சிவகார்த்திகேயனுக்கு பக்கபலமாக 4 பேரை களமிறக்கிய மோகன்ராஜா..!

siva-mohaanraajaa-1

சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடிக்கும் படத்தை இயக்குனர் மோகன்ராஜா இயக்கிவருகிறார்.. கமர்ஷியல் படமாக உருவானாலும் காமெடிக்கும் முக்கியத்துவம் கொடுத்தே ஸ்கிரிப்ட்தடை தயார் செய்துள்ளாராம் மோகன்ராஜா.. சிவகார்த்திகேயன் படங்களில் அதிகபட்சம் அவரே காமெடி செய்துவிடுவார் தான்..

ஆனால் கமர்ஷியல் ஹீரோவானபின் வெறும் காமெடியை மட்டுமே அவர் பண்ணிக்கொண்டு இருக்க முடியாதல்லவா.? அதனால் அவருக்கு பக்கபலமாக இந்தப்படத்தில் தம்பிராமையா, சிங்கம்புலி, ரோபோ சங்கர், ஆர்ஜே பாலாஜி என நான்கு பேரை சிவகார்த்தியனுக்கு பக்கபலமாக களத்தில் இறக்கிவிட்டுள்ளாராம் மோகன்ராஜா.