தெருச்சண்டை போடும் பெண்ணுடன் சிவகார்த்திகேயனுக்கு காதல்..!

சிவகார்த்திகேயனுக்கு இப்போது ஏறுமுகம்தான். வரிசையாக வெற்றிப்படங்களை கொடுத்துவரும் சிவகார்த்திகேயன் அடுத்ததாக தற்போது காவல்காரன்(டாணா) என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்தப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்தப்படத்தை இயக்குனர் துறை செந்தில்குமார் இயக்கியுள்ளார்.

அடுத்ததாக ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் ‘ரஜினி முருகன்’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்தப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம். தயாரிக்கிறது.

இந்தப்படத்தில் ரியல் எஸ்டேட் புரோக்கராக நடிக்கிறார் சிவா. இதற்காக வேட்டி, சட்டை, கூலிங்கிளாஸ் கண்ணாடி என ஆளே மாறப்போகிறார். அதுமட்டுமல்ல, இந்தப்படத்தின் கதாநாயகியும் சாதாரண கேரக்டர் இல்ல.. தெருவில் இறங்கி மற்றவர்களுடன் குழாயடி சண்டை ரேஞ்சுக்கு மல்லுக்கு நிற்பவர். இவர்மீதுதான் சிவாவுக்கு காதல் வருகிறதாம். வரும் ஆகஸ்ட்-16ஆம் தேதி படப்பிடிப்பை துவங்க இருக்கிறார்களாம்.