கேரளாவில் சூர்யா பட ரசிகர் ஷோ டிக்கெட்டை அறிமுகப்படுத்திய சிவகார்த்திகேயன்..!.

tsk tuicket by sivakarthikeyan

சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் வரும் தைப்பொங்கல் அன்று வெளியாக இருக்கிறது.. கேரளாவிலும் வெளியாகவுள்ள இந்தப்படத்திற்கு கேரளாவில் உள்ள சூர்யாவின் ரசிகர் மன்றத்தினர் கடந்த மாதமே ரசிகர் மன்ற டிக்கெட்டுகளை விநியோகிக்க ஆரம்பித்து விட்டார்கள்..

முதல்நாள் ரசிகர் மன்ற ஸ்பெஷல் ஷோவுக்கான டிக்கெட்டை கேரளாவின் வெவ்வேறு பகுதி ரசிகர் மன்றங்களை சேர்ந்தவர்கள், வெவ்வேறு மலையாள திரையுலக பிரபலங்களை வைத்து அறிமுகப்படுத்தி விற்பனையை துவக்கி விட்டனர்.

இந்தநிலையில் சமீபத்தில் கேரளாவுக்கு வேலைக்காரன் பட புரமொஷனுக்காக சென்றிருந்த சிவகார்த்திகேயன், கொல்லம் மாவட்ட சூர்யா ரசிகர்மன்றத்தின் சார்பாக ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் முதல் ரசிகர் ஷோவுக்கான டிக்கெட்டை வெளியிட்டுள்ளார்..