சுந்தர்.சி கூட்டணியில் இணைகிறார் சிவகார்த்திகேயன்..?

 

வெறுமனே காமெடி ரூட்டிலேயே பயணித்தால் சரிவராது என நினைத்த சிவகார்த்திகேயன், இப்போது தான் காமெடி என்கிற வட்டத்தில் இருந்து கொஞ்சம் வெளியே வந்து ‘காக்கி சட்டை’ படம் மூலமாக ஆக்ஷனில் அடியெடுத்து வைத்திருக்கிறார். இந்தப்படம் தான் அவர் ஆக்சன் ரூட்டில் பயணிக்க கொடியசைத்து சம்மதிக்க வேண்டும்..

இந்த நிலையில் காமெடி ஆக்சன் என கமர்ஷியல் ஹீரோவாக உருமாற வேண்டுமென்றால் அது சுந்தர்.சி இயக்கத்தில் நடிக்கும்போது மட்டுமே சாத்தியமாகும் வாய்ப்பு இருக்கிறது. அதற்கான வாய்ப்பும் சிவகார்த்திகேயனை தேடி வந்துள்ளதாக தெரிகிறது.

நான்ஸ்டாப் ஹிட்டுகளால் ராஜநடைபோட்டு வரும் சுந்தர்.சி, ஆம்பள படத்தை தொடர்ந்து விஷாலுடன் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ டைப்பில் ஒரு படம் பண்ண இருப்பதாக சொல்லியிருக்கிறார். அது இந்த வருட கடைசியில் தான் ஆரம்பமாகும் என்பதால் அதற்கு முன்னதாக சிவகார்த்திகேயன் படத்தை துவங்கலாம் என  தெரிகிறது. சிவகார்த்திகேயன் தற்போது ‘ரஜினி முருகன்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார்.