ஷிவராஜ்குமாரை கவர்ந்த சிவகார்த்திகேயன்..!

 

கன்னட சினிமாவின் செஞ்சுரி ஸ்டார் ஷிவராஜ்குமார் தான் ஏற்கும் வேடங்கள் புதிதுபுதிதாக இருக்கவேண்டும் என்று நினைப்பவர். அதேசமயம் தனது படங்களில் அவ்வப்போது சில புதுமைகளை நிகழ்த்தவும் அவர் தவறுவதில்லை.. தற்போது தான் நடித்துவரும் ‘வஜ்ரகயா’ என்கிற படத்தில் மற்ற மூன்று மொழிகளில் உள்ள மூன்று பிரபல நடிகர்களை கெஸ்ட் ரோலில் நடிக்க வைத்திருப்பதும் அந்தவகையில்தான்.

தமிழில் இளம் ஹீரோவாக வலம்வரும் சிவகார்த்திகேயனை சிவராஜ்குமாருக்கு ரொம்பவே பிடித்துப்போனது.. அதனால் அவரை பெங்களூரு வரவழைத்த சிவராஜ்குமார், தன்னுடன் ஒரு பாடலில் சிறப்புத்தோற்றத்தில் ஆடவைத்திருக்கிறார். அதுமட்டுமல்ல, மலையாள நடிகர் திலீப்பும், தெலுங்கு நடிகர் ரவிதேஜாவும் கூட இந்தப்பாடலில் இடம்பெற்றிருக்கிறார்கள்..