ராஜேஷ் டைரக்சனில் சிவகார்த்திகேயன் படம் ; ஸ்டுடியோக்ரீன் தயாரிக்கிறது.

SK13 1

“இது முழுக்க முழுக்க ஒரு எண்டர்டெயினர் படம்” என்று சொல்ல வைத்து மகிழ்ச்சியோடும், கொண்டாட்டத்தோடும் ரசிகர்களை வீட்டுக்கு அனுப்பி வைப்பவர் இயக்குனர் எம்.ராஜேஷ்.. இப்போது சிவகார்த்திகேயனின் 13வது படத்தை இயக்குகிறார். ஸ்டுடியோக்ரீன் தயாரிக்கும் இந்தப்படம் சம்பிரதாய பூஜையுடன் இன்று துவங்கியது.

இதுநாள் வரையில் ஸ்டுடியோக்ரீன் கே.ஈ.ஞானவேல்ராஜா, இயக்குனர் ராஜேஷ், நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோர் தங்களது துறைகளில் முழுக்க பொழுதுபோக்கு படங்களை வழங்கியவர்கள். தற்போது இந்த மூன்று பேரும் ஒரு படத்தில் இணைவது ட்ரிபிள் ட்ரீட்டாக ரசிகர்களுக்கு அமையப் போவது உறுதி.

இந்த படத்தை பற்றி தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கூறும்போது, “ராஜேஷ் படங்களின் கதாநாயகர்களின் கதாபாத்திர சித்தரிப்பு, ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் எப்போதும் அமையும். எனவே சிவகார்த்திகேயன் படத்தில் ரசிகர்கள் என்ன ரசிப்பார்களோ அதை நிச்சயம் ராஜேஷ் இந்த படத்தில் கொடுப்பார் என நம்புகிறேன்” என கூறியுள்ளார்.