அறிமுக இயக்குனரை பாராட்டிய ‘ரெமோ’ நாயகன்..!

sivakarthikeyan-praises-thuruvangal-16-2

கடந்த வாரம் அறிமுக இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியான ‘துருவங்கள் பதினாறு’ படம் திரையுலகம், ரசிகர்கள் என இரண்டு தரப்பினரையும் ஒரு சேர கவர்ந்துள்ளது. ரகுமான் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தைப் பார்த்து விட்டு இயக்குனர் ஷங்கர் உள்ளிட்ட திரையுலகினர் பலரும் வியந்து பாராட்டியுள்ளனர்.

இந்த நிலையில், இந்தப்படத்தை பார்த்துவிட்டு சிவகார்த்திகேயனும் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். “நான் எப்போதும்போல சாதாரணமாகத்தான் இந்தப்படத்தைப் பார்த்தேன். ஆனால் நான் கொஞ்சமும் எதிர்பாராத வகையில் படம் மிகவும் நன்றாக இருந்தது. ஒரு போலீஸ் இன்வெஸ்டிகேஷன் கதையை எடுத்துக்கொண்டு அதை விறுவிறுப்பாகப் படமாக்கியுள்ள விதம் சிறப்பாக இருக்கிறது. இயக்குநர் கார்த்திக் நரேன் உள்பட படக்குழுவினருக்கு வாழ்த்துகள்” என சிவகார்த்திகேயன் பாராட்டியுள்ளார்.