சிவகார்த்திகேயன் பற்றிய வதந்தி – ட்விட்டரில் முற்றுப்புள்ளி வைத்த தனுஷ்

சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களைப்பற்றி வதந்திகளை பரப்புவதற்கென்றே சில கும்பல்கள் இருக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு கும்பல் பரப்பிவிட்ட வதந்திதான் நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் அவரது மனைவி ஆர்த்திக்கும் பிரச்சனை, அவர் தனது மனைவியை விவாகரத்து செய்யப்போகிறார் என்பது.

சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து வருவதால் மளமளவென்று முன்னணி நடிகராக வளர்ந்து வருகிறார். தற்போது அவருக்கும் ஒரு நடிகைக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அதன்காரணமாக கணவன், மனைவி இருவருக்கும் பிரச்சனை என்றும் ஒரு சிலர் வதந்தியை கிளப்பி விட்டுள்ளார்கள். வளசரவாக்கத்தில் உள்ள சிவகார்த்திகேயன் வீட்டில் சத்தம் அதிகம் வந்து கொண்டிருந்ததால், அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் புகார் செய்யும் அளவுக்கு சென்றதாகவும் சிலர் வீட்டுக்கு வந்து சமரசம் செய்ய முயன்றுள்ளதாவும் ஒருபடி மேலேயே இந்த வதந்தி புது வடிவம் பெற்றது.

ஆனால் சிவகார்த்திகேயனும் அவரது மனைவியும் மூன்று தினங்களுக்கு முன்பு தான் தங்களது திருமண நாளை வெகு விமரிசையாக, திரையுலகை சேர்ந்த தனது நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்து கொண்டாடி மகிழ்ந்திருக்கின்றனர். இந்த விருந்தில் கலந்துகொண்ட நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் தளத்தில் இருவரும் அழகான பொருத்தமான தம்பதி என்றும் இவர்கள் அளித்த விருந்துக்கு நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சிவகார்த்திகேயனுக்கும் அவரது மனைவிக்கும் பிரச்சனை என்றால் நேற்று முன்தினம் கோலாகலமாக விருந்து கொண்டாடி இருக்கமுடியுமா என்றும் அவர்கள் இருவருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அவரது வளர்ச்சியை பிடிக்காத யாரோதான் இந்த மாதிரி வதந்திகளை பரப்பிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் சிவகார்த்திகேயனை நன்கு அறிந்தவர்கள் கூறுகிறார்கள்

Leave a Reply

Your email address will not be published.

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>