சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த புதிய பதவி..!

 

12 நாடுகள் பங்கேற்கும் ரக்பி போட்டி சென்னை ஜவாஹர்லால் நேரு விளையாட்டரங்கில் வரும் சனிக்கிழமை (மார்ச்-7) தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடு, இந்திய, ஆசிய ரக்பி சங்கங்கள் இணைந்து நடத்தும் இந்தப் போட்டியில் இந்தியா, தென் கொரியா, பிலிப்பின்ஸ், வங்கதேசம், நேபாளம், உஸ்பெகிஸ்தான், லாவோஸ், ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, புருணே, ஈரான், குவாம் ஆகிய 12 நாடுகளைச் சேர்ந்த ஆடவர், மகளிர் அணிகள் கலந்துகொள்கின்றன.

இந்தப் போட்டியில் இரு பிரிவுகளிலும் முதலிடத்தைப் பிடிக்கும் அணி பிரேசிலில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியின் (2016) தகுதிச் சுற்றுக்கு முன்னேறும். இந்தியாவில், அதுவும் தமிழ்நாட்டின் தலை நகர் சென்னையில் ரக்பி போட்டி நடைபெறுவது அனைவருக்கும் பெருமைதரக்கூடிய ஒன்று.  அதுமட்டுமல்ல, இந்திய ஆடவர், மகளிர் அணிகளுக்கு தூதராக நடிகர் சிவகார்த்திகேயன் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட இருக்கிறார்.