அட்லீயின் உதவியாளர் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்..!

சினிமாவை பொறுத்தவரை குருவிற்கு கிடைக்கும் மரியாதையை பொறுத்தே சிஷ்யர்களுக்கு எதிர்காலத்தின் வாசல் திறக்கும். ராஜாராணி என்கிற ஒரே படத்தின் மூலம் லைம்லைட்டிற்கு வந்த அட்லீக்கு அடுத்ததாக விஜய்யை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்றால், அவரது சிஷ்யரான பாக்யராஜ் என்பவருக்கு சிவகார்த்திகேயனின் புதிய படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த பாக்யராஜ் சுந்தர்.சியிடமும் உதவி இயக்குனராக பணிபுரிந்தவராம். கதாநாயகி யார் என இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில் படத்தின் ஒளிப்பதிவாளராக பி.சி.ஸ்ரீராமும், சவுன்ட் இஞ்சினியராக ஆஸ்கர் விருதுபெற்ற ரசூல் பூக்குட்டியும் இந்தப்படத்தில் இணைந்துள்ளனர். சிவாகர்த்திகேயன் படங்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து வரும் அனிருத் தான் இந்தப்படத்துக்கு இசையமைக்க இருக்கிறார். இந்தப்படத்திற்கான துவக்க விழா பூஜை நேற்று நடைபெற்றது.