துபாயில் ரசிகர்களோடு அமர்ந்து ‘சி 3’ படம் பார்த்த சூர்யா..!

சூர்யா நடிப்பில், ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சி-3’ (சிங்கம் 3) உலகம் முழுவதும் கடந்த வியாழன் அன்று வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. முதல் இரண்டு பாகங்களின் விறுவிறுப்புக்கும் குறையாமல் வெளிவந்திருக்கும் இப்படத்தின், முதல் சிறப்பு காட்சி துபாயில் திரையிடப்பட்டது.

ஹயாட் ரீஜென்சியில் உள்ள ஸ்டார் கலேரியா சினிமாஸ் அரங்கில் நடைபெற்ற இந்த முதல் காட்சி திரையிடல் நிகழ்ச்சியை எஃப்டிபி அட்வர்டைசிங் மற்றும் யெஸ் ஈவண்ட்ஸ் நிறுவனங்கள் மிக சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது. இந்த காட்சியில் நடிகர் சூர்யா பங்கேற்று, ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்த்து, ரசிகர்களை குதூகலப்படுத்தினார்.

இந்த நிகழ்வில் பங்கேற்ற ஏராளமான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் படம் குறித்து பேசியதோடு, அவர்களின் கேள்விகளுக்கும் பதில் சொன்ன சூர்யா, அவர்களுடன் சேர்ந்து படத்தையும் பார்த்தது ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் தள்ளியது.