படா படா பாட்ஷாக்களுடன் இணைந்து நடிக்கும் விஜய்சேதுபதி..!

syeera narasimha reddy 1

மெகாஸ்டார் சிரஞ்சீவியின் புதிய படமாக ‘சயீரா நரசிம்ஹ ரெட்டி’ என்கிற படம் உருவாக இருக்கிறது. சுரேந்தர் ரெட்டி இயக்கவுள்ள இந்தப்படத்தை வழக்கம்போல இன்னொரு சிரஞ்சீவி படம் தானே என சாதாரணமாக கடந்துபோய்விட முடியாது. காரணம் இந்தப்படத்தில் இணைந்துள்ள பிரமிக்க வைக்கும் நட்சத்திர கூட்டணி தான்..

ஆம்.. பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனுடன் நம்ம மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் இந்தப்படத்தில் இடம் பெற்றிருப்பது மிகப்பெரிய ஸ்வீட் சர்ப்ரைஸ்.. இது போதாதென்று கன்னட ஸ்டார் சுதீப்பும் முக்கிய வேடத்தில் நடிக்க, சமீபகாலமாக வில்லனாக கலக்கி வரும் ஜெகபதி பாபுவும் இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ளார்..

இத்தனைக்கும் முத்தாய்ப்பு வைப்பது போல கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். இவ்வளவு பிரமாண்டமான நட்சத்திரங்க இணைந்துள்ள இந்தப்படத்திற்கு அவர் இசையமைத்தால் தானே பொருத்தமாக இருக்கும்.. எஸ்.. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தான் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.