“ரஜினியுடன் நடித்ததால் இன்னும் அழகானேன்” ; சிம்ரன்

simran

சில வருடங்களுக்கு முன்பு நம்பர் ஒன் கதாநாயகியாக இருந்த சிம்ரன், கமல்ஹாசன், அஜித், விஜய், சூர்யா, சரத்குமார் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் பேட்ட படத்திற்கு முன்பு வரை அவர் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்ததில்லை.

ஆனால் ரஜினியுடன் நடிக்கும் கடந்த 2004லிலேயே சந்திரமுகி படம் மூலமாக சிம்ரனை தேடிவந்தது.. ஆனால் சில காரணங்களால் அந்தப்படத்தில் சிம்ரனால் நடிக்க முடியாமல் போனது. அதனால் ரஜினியுடன் நடிக்க முடியவில்லையே என சிம்ரனுக்கு இருந்த மனக்குறை கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் நடித்ததன் மூலம் தீரப்போகிறது என்றே சொல்லலாம்.

இந்தப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்தது குறித்து சிம்ரன் கூறும்போது, “ நான் ரஜினி சாரின் தீவிர ரசிகை. மேலும் அவரை போன்று நடக்க, கண்ணாடி அணிய பலமுறை முயற்சி செய்துள்ளேன். பேட்ட பெரிய படம் ரஜினி சார் நடிக்கிறார், கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார் என்றதுமே இந்த படத்தை விட எனக்கு மனசு இல்லை

‘பேட்ட ‘படத்தின் முதல் நாள் ஷூட்டிங் எனக்கு மிகவும் பதட்டமாக இருந்தது. மேலும் ரஜினி சாரை பார்த்ததும் வசனத்தை மறந்து விடுவேனோ என்ற பதட்டத்தில் இருந்தேன். உடனே அவர் டென்ஷன் ஆக வேண்டாம் நாம் ரசிகர்களுக்காக படம் பண்ணுகிறோம் பதட்டப்படாதீங்க என்று கூறி என்னை உற்சாகப்படுத்தினார்.

‘பேட்ட’ படத்தில் நான் மிகவும் அழகாக இருப்பதாக ரசிகர்கள் கூறுகிறார்கள். உண்மைதான்.. ‘படத்தில் நான் ரஜினி சாருடன் நடித்ததால் தான் நான் அழகாய் இருக்கிறேன் மேலும் இந்த படத்தில் டயட், யோகா ஆகியவற்றை மேற்கொண்டு ஃபிட்டாகவும் என்னை மாற்றிக்கொண்டு இருக்கிறேன். என்றும் கூறியுள்ளார்.சிம்ரன்.