சிம்புவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்த சிலம்பாட்டம் நாயகி..!

sana khan

ஒன்பது வருடங்களுக்கு முன் ‘சிலம்பாட்டம்’ படம் மூலம் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுகமானவர்தான் நடிகை சனா கான். அதன்பின் ஒரு சில படங்களில் தலை காட்டியவர், நீண்ட நாட்களாக எங்கே இருந்தார் என்று தெரியாத நிலையில் தற்போது மீண்டும் சிம்புவுடன் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் முக்கிய வேடத்தில் கேங்ஸ்டர் பெண்ணாக நடிக்கிறார்..

சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்கும் இந்தப்படத்தில் ஏற்கனவே ஸ்ரேயா, தமன்னா மற்றும் நீத்து சந்திரா என மூன்று கதாநாயகிகள் இருக்கும் நிலையில் நான்காவதாக இணைந்துள்ளார் சனா கான்.. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்தப்படத்திரகு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.