அஜித்தின் சட்டையில் சிம்புவின் பாக்கெட்…!

 

எவ்வளவு நாள் தள்ளி ரிலீசானாலும் அஜித் படத்தின் வேல்யூ குறைந்து விடப்போகிறதா என்ன..? எம்.ஆர்.பி.யும் இல்லாத, எக்ஸ்பயரி டேட்டும் இல்லாத ஒரு அபூர்வ புராடக்ட் தான் கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘என்னை அறிந்தால்’ படமும். வரும் பிப்-5ஆம் தேதி இந்தப்படம் வெளியாவதற்கான வேலைகள் தற்போது பரபரப்பாக நடைபெற்றுவருகின்றன.

நெல்லுக்கு பாயும் தண்ணி, கொஞ்சம் புல்லுக்கும் பாயட்டுமே என்கிற ரீதியில் ‘என்னை அறிந்தால்’ படத்துடன் சேர்த்து சிம்பு, நயன்தாரா இணைந்து நடித்துள்ள ‘இது நம்ம ஆளு’ படத்தின் டீசரையும் வெளியிட இருக்கிறார்கள்..  பாண்டிராஜ் இயக்கியுள்ள இந்தப்படத்தின் மூலம் தான் சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார்.